

தூத்துக்குடி தெற்கு சம்பந்தமூர்த்தி தெருவைச் சேர்ந்த பாலகார்த்திக் மனைவி சித்ரகலா (27).இவர் அதே பகுதியில் பாரத மக்கள்மருந்தகம் நடத்தி வருகிறார். கடந்த 1-ம் தேதி பாலகார்த்திக், அவரதுநண்பர் சுரேஷ் ஆகியோரை ஒருகும்பல் கடத்தியது. பின்னர் சித்ரகலா அணிந்திருந்த 6 பவுன்தங்க நகையை பறித்துக் கொண்டு,பாலகார்த்திக்கை இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். சுரேஷை அன்றிரவு12 மணியளவில் திருநெல்வேலி பேட்டையில் உள்ள சுடுகாட்டுபகுதியில் இறக்கிவிட்டுள்ளனர்.
தூத்துக்குடி மத்திய பாகம் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில், திருநெல்வேலி சுரேஷ்பாபு, அவரது நண்பர்களானசரவணன் (39), வீரமணிகண்டன் (29), சதாம் உசேன் (31) ஆகியோர் சேர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் 4 பேரையும் தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர்.