புதிதாக 178 பேருக்கு கரோனா தொற்று  :

புதிதாக 178 பேருக்கு கரோனா தொற்று :

Published on

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 43 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47 ஆயிரத்து 176-ஆக அதிகரித்துள்ளது. மாவட் டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை சராசரியாக 500 என்றளவில் தொடர்வதால் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், தடுப்பூசி செலுத்திக்கொள்வதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 20 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். 218 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தி.மலை மாவட்டத்தில் புதிதாக 115 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 50,236-ஆக உயர்ந்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in