ஒரே நாளில் 112 பேர் கைது :

ஒரே நாளில்  112 பேர் கைது :
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட 112 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர். மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் கஞ்சா விற்பனை செய்ததாக 19 பேர் கைது செய்யப்பட்டு, 2 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக 9 பேர், சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக 14 பேர் கைது செய்யப்பட்டனர். பணம் வைத்து சூதாடியதாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 70 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in