சிதம்பரம் அருகே வையூரில் - 15 அடி நீளமுள்ள முதலை பிடிபட்டது :
சிதம்பரம் அருகே உள்ள வையூரில் 400 கிலோ எடை கொண்ட முதலையை வனத்துறையினர் பிடித் தனர்.
சிதம்பரம் அருகே உள்ள வையூர் கிராமத்தில் உள்ள வயல் வெளி பகுதியில் நேற்று பெரிய முதலை ஒன்று இருந்துள்ளது. இதை பார்த்த அக்கிராமமக்கள் சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தந்தனர். சிதம்பரம் வனசரக அலுவலர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் வனவர் அஜிதா, வனகாப்பாளர் அனுசுயா, வனக்காவலர்கள் செந்தில்குமார், பாண்டியன் ஆகியோர் கொண்ட குழுவினர்சம்பவ இடத்துக்கு சென்றனர். நீண்ட போராட்டத்துக்கு பின்னர் வயலில் இருந்த 400 கிலோ எடை கொண்ட 15 அடி நீளம் உள்ள முதலையை பிடித்தனர். அதனை பாதுகாப்பாக எடுத்துச் சென்று சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி குளத்தில் விட்டனர்.
இந்த முதலை பழைய கொள்ளிடத்தில் இருந்து வையூர் வாய்க்கால் வழியாக வயலுக்கு வந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். வையூர் கிராமத்தில் அருகே பழையகொள்ளிடத்தில் அதிக அளவில்முதலைகள் உள்ளன. வனத்துறை யினர் பழைய கொள்ளிடத்தில் முதலைகள் உள்ளது என்ற எச்சரிக்கை பலகையையும் பழைய கொள்ளிட்ட கரையோர கிராமங்களில் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
