

தொண்டி அருகே 4 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன மீனவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
தொண்டி அருகே முள்ளி முனையைச் சேர்ந்த பால்செல்வம் மகன் பால்கண்ணன் (30). மீனவர். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இந்நிலையில் பால்கண்ணனை, கடந்த பிப்ரவரி முதல் காணவில்லை. இது தொடர்பாக தொண்டி போலீ ஸார் வழக்குப் பதிந்து தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பால்செல்வம் தனது மகனை கண்டுபிடித்து ஒப்படைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட எஸ்பி இ. கார்த்திக், சப் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைத்தார். பால்கண்ணன் கொலை செய்யப்பட்டு புதைக் கப்பட்டதை தனிப்படையினர் கண்டறிந்தனர். அதையடுத்து தொண்டி அருகே வீரசங்கிலிமடம் என்ற இடத்தில் பால் கண்ணன் புதைக்கப்பட்ட இடத்தில் திரு வாடானை வட்டாட்சியர் செந்தில் வேல்முருகன் முன்னிலை யில் உடலைத் தோண்டி எடுத்து உடற் கூறு ஆய்வு செய்யப் பட்டது.
அதனை யடுத்து பால்கண்ணனை கொலை செய்ததாக முள்ளிமுனையைச் சேர்ந்த கதிர வன் (33), ஜெயபால்(32) ஆகி யோரைக் கைது செய்தனர். மேலும் கொலையில் தொடர்புடைய ஒரு பெண் உள்ளிட்ட 5 பேரைத் தேடி வருகின்றனர்.
போலீஸார் விசாரணையில் முள்ளிமுனை கிராமத்தில் ஊர் திருவிழா நடத்துவதில் பால் செல்வம், சின்னமுத்து ஆகிய இரு தரப்பினரிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதில் சின்னமுத்து மகன் ஜெயக்குமார் கடந்த 5.7.2018-ல் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலையை பால்செல்வம் தரப்பினர் தான் செய்தனர் என சின்னமுத்து தரப்பினர் கருதி அதற்கு பழிக்குப்பழியாக பால் கண்ணனைக் கொலை செய் தது தெரியவந்தது.