

மேலப்பாளையம் கன்னிமார் குளத்தின் மையப்பகுதியில் குறுங்காடு ஏற்படுத்த நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சங்கத்தினர் இணைந்து மரக்கன்று கள் நட்டனர்.
மேலப்பாளையம், அம்பாசமுத் திரம் ரோடு பகுதியில் அமைந்து ள்ள கன்னிமார் குளம் 64 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மேலப் பாளையம் மக்களின் நீராதாரமாக திகழ்ந்து வரும் இக்குளத்தை மேம் படுத்தும் விதமாக ஆண்டுதோறும் தொடர்ச்சியாக பணிகள் நடை பெற்று வருகிறது. ரூ.12 லட்சம் செலவில் பொதுமக்கள் பங்களி ப்புடன் குளத்தை தூர்வாரி, கரைகள் பலப்படுத்தப்பட்டு, மரக் கன்றுகள் நடப்பட்டன.
இந்நிலையில் அடுத்த கட்டமாக குளத்தின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய திட்டுகளில் குறுங்காடு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீர் நிலைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சங்கத் தலைவர் அப்துல் முத்தலிப் மரக்கன்றுகள் நட்டு குறுங்காடு அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் குதுப்புன் நஜிப், முகம்மது யூனுஸ், சலீம் தீன் மற்றும் பசுமை மேலப்பாளையம் குழு இளைஞர்கள் அபுபக்கர் சித்திக், ரஹ்மான்கனி, இப்ராகிம், தாஹிர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நாவல், மூங்கில் உட்பட 100 மரக்கன்றுகள் நட்டனர். மரங்கள் வளர்ந்தால் அவற்றில் பறவைகள் கூடுகள் கட்டி சரணாலயம்போல் திகழும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.