இருளர் இன மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தரப்படும் : ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் உறுதி
கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு நிவாரணப் பொருட்களை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேற்று வழங்கினார். உடன், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்.
திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் இருளர் இன மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.