

மேட்டூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதியதில், அண்ணன், தம்பி உயிரிழந்தனர்.
மேட்டூர் அடுத்த சத்யா நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (29). இவரது தம்பி செல்வம் (27). இவர்கள் இருவரும் பொக்லைன் வாகனம் சொந்தமாக வைத்து ஓட்டி வந்தனர்.
இருவரும் நேற்று காலை பொக்லைன் வாகனத்துக்கு தேவையான உதிரிப் பாகங்கள் வாங்க இருசக்கர வாகனத்தில் பெங்களூருக்கு புறப்பட்டனர்.
மேச்சேரி அடுத்த பொட்டனேரி அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த வேன், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில், தூக்கி வீசப்பட்ட இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதுதொடர்பாக மேச்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான வேன் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.