கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் - வழக்கு தாக்கல் செய்யும் மையம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திறப்பு :

கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இ-சேவை மையத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி திறந்து வைத்து பார்வையிட்டார்.
கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இ-சேவை மையத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி திறந்து வைத்து பார்வையிட்டார்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விரிவுப் படுத்தப்பட்ட வழக்கு தாக்கல் செய்யும் மையம், இ-சேவை மையத்தை சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற் காக மையப்படுத்தப்பட்ட வழக்கு தாக்கல் செய்யும் மையம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், வழக்கு விவரங்களை வழக்கறிஞர்களும், வழக்கு நடத்துபவர்களும் அறிந்து கொள்ள உதவும் இ-சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது . சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமை வகித்து கட்டிடம், இ- சேவை மையத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வுகளுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி ரா.கலைமதி முன்னிலை வகித்தார். இதனை தொடர்ந்து நீதிபதிகள், வழக்கறிஞர்களுடன் ஆலோ சனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் மாவட்ட நீதிபதி விஜயகுமாரி, குடும்ப நல நீதிபதி செல்வம், மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி லதா, மோட்டார் வாகன விபத்துக்கள் கோருரிமை தீர்ப்பாய சிறப்பு மாவட்ட நீதிபதி மணி, தலைமை குற்றவியல் நீதிபதி ராஜசிம்மவர்மன், முதன்மை சார்பு நீதிபதி கணேசன், கூடுதல் சிறப்பு நீதிபதி குமாரவர்மன், மோட்டார் வாகன விபத்துக்கள் கோருரிமை தீர்ப்பாய சிறப்பு சார்பு நீதிபதி ராஜமகேஷ், கிருஷ்ணகிரி ஜே.எம். 2 நீதிமன்ற நீதிபதி பீட்டர் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in