திருமணத்துக்கு பெண் இருப்பதாகக் கூறி - கேரள இளைஞர்களிடம் பணம் பறித்த வழக்கில் 5 பேர் கைது :

திருமணத்துக்கு பெண் இருப்பதாகக் கூறி -  கேரள இளைஞர்களிடம் பணம் பறித்த வழக்கில் 5 பேர் கைது  :
Updated on
1 min read

திருமணத்துக்கு பெண் இருப்பதாகக் கூறி, கேரள இளைஞர்களிடம் நகை மற்றும் பணம் பறித்த வழக்கில், அம்மாநில போலீஸார் திருப்பூரில் நேற்று 5 பேரை கைது செய்தனர்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (32). திருமணத்துக்கு பெண் பார்த்து வந்தார். இது தொடர்பாக, கடந்த மார்ச் மாதம் கேரள பத்திரிகையில் விளம்பரம் செய்திருந்தார்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருந்து ராமகிருஷ்ணனை ஒருவர் தொடர்பு கொண்டு, மணப்பெண் இருப்பதாக கூறியுள்ளார். இதை நம்பி, கடந்த ஏப். 1-ம் தேதி தனது நண்பர் பிரவீன் என்பவருடன் ராமகிருஷ்ணன் காரில் பல்லடம் வந்துள்ளார். அப்போது,அலைபேசியில் தொடர்புகொண்ட நபர், இருவரையும் அழைத்துச் சென்று ஒரு வீட்டில் அமரவைத்து விட்டு, பெண்ணை அழைத்து வருவதாக சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் எட்டு பேர் கொண்ட கும்பல் வந்து இவர்கள்இருவரையும் கட்டிப் போட்டுள்ளனர். மேலும், கத்தியை காட்டி மிரட்டி 7 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் பணத்தை பறித்துவிட்டு திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதுதொடர்பாக பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் காவல் துறையிடம், பாதிக்கப்பட்டவர்கள் புகார்அளித்துள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய கும்பல், திருப்பூர்மத்திய காவல் எல்லைக்கு உட்பட்டபகுதியில் இருப்பதாக கிடைத்ததகவலின் பேரில், பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு பகுதியைச் சேர்ந்த விமல் (43), திருப்பூரை சேர்ந்த பிரகாஷ் (40), சிவா( 39), விக்னேஷ் (23), மணிகண்டன் (25) ஆகிய 5 பேரை கேரள தனிப்படை காவல்துறையினர் கைது செய்து பாலக்காடு சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in