கோயில் பணியாளர்களுக்கு கரோனா நிவாரண உதவி வழங்கல் :

கோயில் பணியாளர்களுக்கு கரோனா நிவாரண உதவி வழங்கல் :
Updated on
1 min read

தேனி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் மாத சம்பளமின்றி பணிபுரியும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு கரோனா நிவாரண உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி சின்னமனூரில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரன் தலைமை வகித்தார். கம்பம் எம்எல்ஏ என்.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் உள்ளிட்ட பணியாளர்கள் 152 பேருக்கு தலா ரூ.4 ஆயிரம், 10 கிலோ அரிசி உட்பட 16 வகை மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் சி.குமரதுரை, உதவி ஆணையர் அனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in