கிருஷ்ணகிரி வட்டாரத்தில் - 8600 ஹெக்டர் பரப்பளவில் உணவு தானியம் பயிரிட திட்டம் :

கிருஷ்ணகிரி வட்டாரத்தில்  -  8600 ஹெக்டர் பரப்பளவில் உணவு தானியம் பயிரிட திட்டம் :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி வட்டாரத்தில் 8600 ஹெக்டர் பரப்பளவில் தானியம் பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது என வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன் கம்மம்பள்ளி கிராமத்தில் கூட்டுப்பண்ணைய திட்டம் மூலம் வழங்கப்பட்டுள்ள இயந்திரங்களை ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகளிடம் அவர் பேசியதாவது:

கிருஷ்ணகிரி வட்டாரத்தில் உணவு தானிய இயக்கம் திட்டத்தில் நடப்பு ஆண்டில் 8600 ஹெக்டர் பரப்பளவில் நெல், சோளம், கேழ்வரகு, மக்காச்சோளம், துவரை, உளுந்து, பச்சை பயறு, காராமணி, கொள்ளு, மொச்சை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நிலக்கடலை, எள், கரும்பு உள்ளிட்ட பணப்பயிர்கள் 900 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் நெல், ராகி, துவரை, காராமணி விதைகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது என்றார்.

ஆய்வின் போது, உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் பன்னீர்செல்வம், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முருகன், அட்மா திட்ட உதவி மேலாளர்கள் பார்வதி, சண்முகம், உதவி வேளாண்மை அலுவலர்கள் விஜயன், முத்துசாமி, புஷ்பாகரன், சென்னகேசவன், சிவராசு ஆகியோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in