

ஓசூரில் வேளாண் வணிக வரித்துறை மூலம் செயல்படுத்தப் படும் ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம் உள்ளிட்ட திட்டப்பணிகள் குறித்து வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் வள்ளலார் ஆய்வு மேற்கொண்டார்.
ஓசூர் வட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம், சர்வதேச மலர் ஏல மையம், ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் ஆகிய திட்டப்பணிகளை வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் வள்ளலார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதேபோல ஓசூர் பகுதியில் நடமாடும் வாகனங்களில் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்வதையும் வணிகத்துறை ஆணையர் வள்ளலார் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது கிருஷ்ணகிரி வேளாண்மை துணை இயக்குநர் ஜெயராமன், உழவர் சந்தை நிர்வாக அலுவலர் சுமிதா, வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.