

திருச்சி: திருச்சி சரகத்தில் 16 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி சரக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த இன்ஸ்பெக்டர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்து டி.ஐ.ஜி ராதிகா நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக ஆர்.ராமானுஜம், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக ஆர்.செந்தாமரைச்செல்வி, புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி இன்ஸ்பெக்டராக வி.செல்வி, விராலிமலை இன்ஸ்பெக்டராக எம்.பத்மா, திருமயம் இன்ஸ்பெக்டராக வி.கவுரி, அரியலூர்-2 இன்ஸ்பெக்டராக டி.கவிதா, அரியலூர் மாவட்ட குற்றப் பதிவேடுகள் பிரிவு இன்ஸ்பெக்டராக டி.அனிதா ஆரோக்கியமேரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல, கரூர் மாவட்டம் தோகைமலையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய எஸ்.காசிபாண்டியன் குளித்தலைக்கும், அரியலூர்-1 காவல் நிலையத்தில் பணியாற்றிய எஸ்.ராதாகிருஷ்ணன் கரூர் மாவட்டம் க.பரமத்திக்கும், அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் பணியாற்றிய ஏ.கண்ணதாசன் கரூர் மாவட்டம் வெங்கமேடு காவல்நிலையத்துக்கும், திருச்சி மாவட்டம் ஜீயபுரம்-1 காவல்நிலையத்தில் பணிபுரிந்த ஏ.பன்னீர்செல்வம் பெல் காவல் நிலையத்துக்கும், அங்கு பணிபுரிந்த பி.பிச்சையா ஜீயபுரம்-2 காவல் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதவிர கரூர் மாவட்டம் குளித்தலையில் பணிபுரிந்த கே.உதயகுமார், வெங்கமேட்டில் பணிபுரிந்த பி.ரமேஷ், க.பரமத்தியில் பணிபுரிந்த ஜே.ரமாதேவி ஆகியோர் திருச்சி சரக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.