

வட மாநிலங்களில் இருந்து கோவை மற்றும் திருப்பூருக்கு வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ரயில் நிலை யங்களில் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கரோனா ஊரடங்கு காரணமாக தொழில் நகரங்களான கோவை, திருப்பூரில் நிறுவனங்கள் மூடப் பட்டதால் அசாம், ஜார்கண்ட், பிஹார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
தற்போது, ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, நிறுவனங்கள் இயங்கத்தொடங்கியுள்ளதால், ஊருக்கு சென்ற தொழிலாளர்கள் திரும்ப தொடங்கியுள்ளனர்.
தொழிலாளர்களின் வருகை அதிகரித்ததை தொடர்ந்து, கோவை மற்றும் திருப்பூர் ரயில் நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக, கோவை ரயில்வே அதிகாரிகள் கூறும் போது, “தொடக்கத்திலேயே தொற்றைகண்டறியும் நோக்கில் ரயில்களில் வரும் பயணிகளுக்கு சுகாதாரத் துறையுடன் இணைந்து பரிசோ தனை நடைபெற்று வருகிறது.
கோவையில் நேற்று மட்டும் 500 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டன" என்றனர்.
மேற்கு வங்க மாநிலம் சாலிமர் பகுதியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் மூலம் நேற்று திருப்பூர் வந்திறங்கிய வெளிமாநில தொழிலாளர்களுக்கு, மாநகராட்சி சுகாதாரத் துறை மூலம் கரோனா பரிசோதனை நடந்தது. பரிசோதனை மேற்கொள்ளும் தொழிலாளர்களின் தொடர்பு எண்கள், வீட்டு முகவரி மற்றும் நிறுவன முகவரி ஆகியவை சேகரிக்கப்பட்டன.
மேலும் அவர்கள் முடிவுகள் வரும் வரை, நிறுவனம் அல்லது வீடுகளில் மூன்று நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. பரிசோதனை முடிவுகள்வெளியான பின்னர், பின்னலாடைநிறுவனங்களில் பணியாற்ற அனுமதிக்கலாம் என சுகாதாரத்துறை சார்பில் தொழிலாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.