சேலத்தில் இன்று காய்ச்சல் கண்டறியும் முகாம் :

சேலத்தில் இன்று காய்ச்சல் கண்டறியும் முகாம்  :
Updated on
1 min read

சேலத்தில் இன்று (2-ம் தேதி) காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெறவுள்ள பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாநகராட்சி பகுதியில் நேற்று 48 பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டதில், 3,124 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. இன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மாமாங்கம், மெய்யனூர், நெடுஞ்சாலை நகர், வசக்காட்டு காலனி, தென் அழகாபுரம், கோரிமேடு, ஜான்சன் பேட்டை மேற்கு, சொர்ணாம்பிகை தெரு, சக்தி நகர், வால்மீகி தெரு, பாரதியார் தெரு, பழைய பிள்ளையார் கோயில் தெரு, தாமோதரன் தெரு, கண்ணகி தெரு, வள்ளுவர் நகர், குமரன் நகர் ஆகிய பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடக்கவுள்ளன.

பிற்பகல் 12 மணி முதல் 2 மணி வரை  ராம் நகர், அந்தோனி புரம், அம்மன் நகர், அண்ணாமலை தெரு, சாரதா காலேஜ் ரோடு, டிவிஎஸ் காலனி, வெங்கடேசபுரம், கன்னார தெரு, வாசக சாலை, ஹவுசிங் போர்டு குறிஞ்சி நகர், பிடாரியம்மன் கோயில் தெரு, வித்யா நகர், பென்ஷன் லைன் வடக்கு தெரு, கேபி கரடு, தொட்டன செட்டி காடு, பெருமாள் கோயில் மேடு ஆகிய பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடக்கவுள்ளது.

மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை ஜாகீர் அம்மாப்பாளையம் காமராஜர் தெரு, சோளம்பள்ளம் சக்கரைபுளியமரம், நேரு தெரு, சின்னப்பன் தெரு, போயர் தெரு, ராஜா நகர், நாராயண பிள்ளை தெரு, வெங்கடசாமி தெரு, காமராஜர் நகர் காலனி, குகை எருமாபாளையம் ரோடு, ஓந்தாப்பிள்ளை காடு, ராகவேந்திரா தெரு, ராமகிருஷ்ணா ரோடு, ரங்கதாஸ் தெரு, அண்ணா நகர், பராசக்தி நகர் ஆகிய பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெறவுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in