புதைத்து வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் சிக்கின :

புதைத்து வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் சிக்கின :
Updated on
1 min read

மரக்காணம் அருகே கொழுவாரி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி.

இவர், தனக்கு சொந்தமான பசு மாடுகளை கழுவெளி பகுதியில் மேய்த்து கொண்டிருந்தார். அப்போது, அவரது ஒரு மாடு புற்களை கடித்தபோது பலத்த வெடி சத்தம் கேட்டுள்ளது. அந்த மாட்டின் முகம் சிதைந்து, சம்பவ இடத்திலேயே இறந்து விட்டது.

தகவலறிந்து வந்த போலீஸார் வெடிக்காமல் இருந்த 7 நாட்டு வெடிகுண்டுகளை மீட்டனர். கழுவெளியில் வெளிநாட்டுப் பறவைகள், காட்டு பூனைகள், காட்டுப் பன்றிகள் வசிக்கின்றன. சிலர் இவற்றை நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி வேட்டையாடுகின்றனர். அதற்காக புதைத்து வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள்தான் சிக்கியுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in