

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,‘‘தமிழக அரசுத் துறைகளில், பணிபுரிந்து ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் மாவட்ட கருவூலம் மற்றும் சார் கருவூலங்களில் நேர்காணல் நடத்தப்படும். தற்போது கரோனா தொற்று பரவலின் காரணமாக, நடப்பாண்டு (2021) நேர்காணல், வாழ்நாள் சான்றிதழ்களை சமர்ப்பித்தல், ஜீவன் பிரமான் இணையதளத்தின் மூலமாக மின்னணு வாழ்நாள் சான்றிதழ்களை அனுப்புதல் போன்றவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது’’ எனக் கூறப்பட்டுள்ளது.