நூலகங்களை விரைவில் திறக்க மக்கள் வலியுறுத்தல் :

நூலகங்களை விரைவில் திறக்க மக்கள் வலியுறுத்தல்  :
Updated on
1 min read

தமிழகத்தில் கரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்ட நூலகங்கள் விரைவில் திறக்கப்பட வேண்டும் என ஏராளமான வாசகர்கள் காத்திருக்கின்றனர்.

கரோனா தொற்று பரவலால் ஏப். 10-ம் தேதி முதல், தமிழகத்தில் மூடப்பட்ட 4,638 நூலகங்கள் இதுவரை திறக்கப்படவில்லை. 2 மாதங்களாக மூடியிருப்பதால் வாசகர்கள், வாசிப்பு பழக்கம் உடையோர் நூலகம் திறப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கடந்த 28-ம் தேதி முதல் சில மாவட்டங்களில் கோயில்களை திறக்க அரசு அனுமதியளித்த நிலையில், நூலகங்களுக்கும் அதுபோன்ற அனுமதி கிடைக்கும் என வாசகர்கள், நூலகர்கள் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்கு தயாராவதற்கு நூலகங்கள் உதவியாக இருக்கும்.

எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களையும் திறந்து கரோனா பரவல் தடுப்பு விதிகளுக்கு உட்பட்டு சமூக இடைவெளி, முகக்கவசம் அணிந்து வரும் வாசகர்களை அனுமதிக்கலாம் என்பதே அனைத்துத் தரப்பினரின் கருத்தாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in