

ராஜபாளையத்தில் தம்பதி விஷம் குடித்ததில் மனைவி உயிரிழந்தார். கணவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் சாவடி தெருவைச் சேர்ந்தவர் வனத்துரை. இவரது மனைவி மலர்கொடி. இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. மகன், மகள் உள்ளனர்.
கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் சம்பவ இடத்திலேயே மலர்கொடி உயிரிழந்தார். அருகில் இருந்தவர்கள் வனத்துரையை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து மலர்கொடியின் தந்தை சிங்கராஜ் அளித்த புகாரின் பேரில் சேத்தூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.