

மதுரை அருகே பூட்டியிருந்த கடையில் துளையிட்டு ரூ.1.31 லட்சம் மற்றும் பொருட்களை திருடிச்சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். மதுரை வாடிப்பட்டி அருகி லுள்ள எர்ரம்பட்டியைச் சேர்ந் தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் சிக்கந்தர்சாவடி பகுதியில் அலங்கை வேல்முருகன் மோட்டார்ஸ் என்ற பெயரில் ஷோரூம் நடத்துகிறார்.
கடந்த 28-ம் தேதி கடை பூட்டப்பட்டிருந்த நிலையில், அடுத்த நாள் ஊழியர் பொன் மணிகண்டன் வழக்கமாக கடையைத் திறக்க வந்தார்.
அப்போது கடையின் மேல் பகுதியில் துளையிட்டு உள்ளே புகுந்த நபர்கள் பெட்டியில் இருந்த ரூ.1,31,145 மற்றும் மடிக்கணினி, மானிட்டர், எல்இடி டிவி, சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை திருடி தப்பியது தெரியவந்தது. அலங்காநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.