

கோவில்பட்டி: தேசிய மற்றும் ஊரக திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற கடலையூர் செங்குந்தர் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் தபால் தலை வெளியிடப்பட்டது.
தேசிய திறனாய்வுத் தேர்வில் கோவில்பட்டி அருகே கடலையூர் செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி மாணவர் தமிழ்ச்செல்வன், மாணவி செந்தமிழ் செல்வி, ஊரக திறனாய்வு தேர்வில் மாணவிகள் ரம்யா, சிவப்பிரியா, செல்வலட்சுமி, நந்தினி, கோமதி ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களை கவுரவிக்கும் வகையில் பள்ளி நிர்வாகம் சார்பில் இவர்களது புகைப்படங்கள் அச்சிட்ட தபால் தலை வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளிச் செயலாளர் மா.மாரிமுத்து தலைமை வகித்து, தபால் தலைகளை வெளியிட்டார். இதில், நிர்வாகக்குழு உறுப்பினர் சங்கரசுப்பு, தலைமை ஆசிரியர் விவேகானந்தன், ஆசிரியர்கள் திலகவல்லி, அய்யமுத்துராஜா மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர். தேசிய திறனாய்வு தேர்வு பொறுப்பாசிரியர் தேவி நன்றி கூறினார்.