

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாநகரில் ரூ.10.35 லட்சத்தில் கட்டப்பட்ட நியாய விலை கட்டிட திறப்பு விழா நடந்தது. ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமை வகித்தார். அமைச்சர் கீதாஜீவன் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் செ.ராஜூ, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி கலந்துகொண்டனர். முன்னதாக கோவில்பட்டி நகராட்சி கூட்டரங்கில் நடந்த பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர், ஆட்சியர் பங்கேற்றனர்.