

தென்காசி: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம் இந்து ஆதிதிராவிடர்களுக்காக மகளிர் நிலம் வாங்குதல் திட்டம், நிலம் மேம்படுத்துதல் திட்டம், தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டம், இளைஞர்களுக்கான மருத்துவ மையம், மருந்தியல், கண்ணாடியகம், ரத்த பரிசோதனை மையம் அமைக்க கடனுதவி வழங்கப்படுகிறது.
தொழில்முனைவோர் திட்டத்தில் பயன்பெற 18 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவர்களாகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டங்களில் பயன்பெற http://application.tahdco.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக நாட்களில், அலுவலக நேரத்தில் மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகம், போலீஸ் ரிசர்வ்லைன் ரோடு, பாளையங்கோட்டை- 627 002 என்ற முகவரியிலோ அல்லது 0462-2561012, 2902012 ஆகிய அலுவலக தொலைபேசி எண்கள், மாவட்ட மேலாளரை 9445029481 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ பயனடையலாம். இத்தகவலை தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.