ஆசிரியையிடம் நகை பறிப்பு :

ஆசிரியையிடம் நகை பறிப்பு :
Updated on
1 min read

வேலூரில் நடந்துச்சென்ற ஆசிரி யையிடம் தங்கச்சங்கிலி பறித்துச்சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

வேலூர் சாயிநாதபுரம் தட்சிணாமூர்த்தி கோயில் தெருவைச் சேர்ந்தவர் செல்வி (53) இவர், தி்.மலையில் அரசுப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலை யில் நேற்றிரவு தனது வீட்டுக்கு நடந்துச் சென்றுக்கொண்டி ருந்தார். அப்போது, அவ் வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர், செல்வி கழுத்தில் அணிந்திருந்த ஐந்தரை பவுன்தங்கச்சங்கிலியை அபகரித்துக் கொண்டு கண் இமைக்கும் நேரத் தில் தப்பிச் சென்றனர். இந்த காட்சி அங் குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவானது.

இது குறித்து பாகாயம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in