லிம்ரா மற்றும் கேரியர் பாய்ன்ட் இணைந்து நடத்தும் - நீட் தேர்வு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் :

லிம்ரா மற்றும் கேரியர் பாய்ன்ட் இணைந்து நடத்தும் -  நீட் தேர்வு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் :
Updated on
1 min read

மருத்துவப் படிப்புக்கான பல்வேறு நுழைவுத் தேர்வுகளில் மாணவர்களுக்குப் பயிற்சிஅளித்து 1,200-க்கும் மேற்பட்ட டாக்டர்களை உருவாக்கியுள்ள சென்னை, லிம்ரா ஓவர்சீஸ்எஜுகேஷன்ஸ், நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கென இந்திய அளவில் புகழ்பெற்ற கேரியர் பாய்ன்ட் நிறுவனத்துடன் இணைந்து, நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை ஆன்லைனில் இந்த ஆண்டு நடத்துகிறது.

வழக்கமாகப் பெறப்படும் கட்டணம்ரூ.6,999 தமிழக மாணவர்களுக்காக ரூ.2,499ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் 9952922333/ 9444615363 ஆகிய எண்களில் அழைத்து பதிவு செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து லிம்ரா நிறுவன இயக்குநர் முகமது கனி கூறியதாவது:

தினமும் காலையில் இணைய வழியில் குறிப்பிட்ட நேரத்தில், பாடங்கள் குறித்த விரிவுரை வகுப்புகள் நடத்தப்படும். தேர்வுக்கான 3 பாடங்கள் 3 மணி நேரம் நடத்தப்படும்.

இவை வீடியோ ஃபைல்களாக பதியப்பட்டு மாணவர்களுக்கு அன்று மாலையே அனுப்பப்படும். அவற்றை மீண்டும் மீண்டும் இயக்கி மாணவர்கள் பாடங்களைத் தெளிவாகவும் முழுமையாகவும் கற்றுக் கொள்ளலாம்.

வாரம்தோறும் சிறப்பு வகுப்பு, தேர்வுகள்நடத்தப்படும். இவ்வாறு 45 நாட்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்ட பின்னர், 10 நாட்களுக்குதினமும் ஒரு மாதிரித் தேர்வு நடத்தப்பட்டுபயிற்சி அளிக்கப்படும்.

சந்தேகம் இருந்தால், அப்பாடங்களைக் குறிப்பிட்டு வேண்டுகோள் பதிவு செய்யலாம்.சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுடன் நேரடியாக சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள, வகுப்புகளுக்கான நேரம் குறிக்கப்பட்டு மாணவர்களுக்குத் தெரிவிக்கப்படும்.

தொடர்ந்து வகுப்புகள், தேர்வுகளை முறையாகப் பின்பற்றுவோர் நீட் தேர்வில் குறைந்தது 500 மதிப்பெண் எடுக்க கேரியர் பாய்ன்ட், லிம்ரா உத்தரவாதம் தருகிறது. இவ்வாறு இயக்குநர் முகமது கனி தெரிவித்தார். l

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in