

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று விநாடிக்கு 5,948 கனஅடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இதனால், அணைக்கு வரும் நீரின் அளவும் ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 3,568 கனஅடியாக இருந்த நீர் வரத்து நேற்று காலை 5,948 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 86.90 அடியாக இருந்த அணை நீர் மட்டம் நேற்று காலை 86.14 அடியாக சரிந்தது. அணையில் 48.37 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.