

திண்டுக்கல் மாவட்டம் அய் யாபட்டி கிராமத்தில் மருத்துவம் படிக்காமல் ஆங்கில முறை சிகிச்சையளித்து வந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
சாணார்பட்டி அருகே உள்ள அய்யாபட்டியை சேர்ந்தவர் காளி யப்பன்(50). இவர் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளிப்பதாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் உதவியுடன் அய்யாபட்டியில் உள்ள காளியப்பன் நடத்தி வந்த கிளினிக்கை சோதனையிட்டனர். அங்கு இருந்த ஆங்கில மருந்து பொருட்களை கைப்பற்றினர்.
இவரிடம் மருத்துவம் படித்தற் கான சான்றிதழ் இல்லை.
இதையடுத்து அவரது கிளி னிக்குக்கு சுகாதாரத் துறையினர் சீல் வைத்தனர். காளியப்பன் மீது வழக்குப்பதிவு செய்து சாணார்பட்டி போலீஸார் கைது செய்தனர்.
கைதுசெய்யப்பட்ட காளி யப்பன் அமமுக தெற்கு ஒன்றியச் செயலாளராக உள்ளார்.