

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த சிவநாதபுரம் கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (40). சாராய வியாபாரி. இவரை, அரியூர் காவல் துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.
இவர், மீது ஏற்கெனவே சாராய வழக்குகள் நிலுவையில் உள்ளதால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில், செல்வராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று உத்தரவிட்டார்.
சாராயம் விற்றவர் கைது