

கரோனா நோயாளிகளுக்கு பயனளிக் கும் பவுடர் வடிவிலான 2 டிஜி மருந்து விரைவில் விற்பனைக்கு வரும் என டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் விலை ரூ.990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலின் இரண் டாவது அலையில் பெரும்பாலா னோருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் அவசியம் ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்தன. இந்நிலையில் மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) மற்றும் டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் நிறுவனம் இணைந்து மூச்சுத் திணறல் ஏற்படும் நோயாளிகளுக்கு அது தீவிரமடை வதைத் தடுக்கும் வகையில் பவுடர் வடிவிலான மருந்தை உருவாக்கின.
``2-டியாக்ஸி - டி - குளுக்கோஸ் ஓரல் பவுடர்’’ என்ற பெயரிலான இந்த மருந்து பவுடர் 2.34 கிராம் அளவிலானது. இதை தண்ணீரில் கலந்து சாப்பிடும் விதமாக சாஷே பாக்கெட்டுகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தண்ணீரில் கலந்து குடிப்பதால் உடலுக்குள் சென்று வைரஸால் பாதிக்கப் பட்ட செல்களை அடையாளம் கண்டு பிடித்து ஒருங்கிணைத்து, புதிதாக எந்த செல்களும் பாதிக்கப்படாமல் தடுத்து, வைரஸ் வளர்ச்சியையும் தடுக்கிறது.
இதற்கான 3 கட்ட கிளினிக்கல் பரிசோதனைகள் நடத்தி பாதிக்கப்பட்ட கரோனா நோயாளிகளுக்கு மருந்தை அளித்ததில் நல்ல பலனை தந்தது. இதையடுத்து அவசரகால கரோனா மருந்து என்ற வகையில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத னால் வர்த்தக ரீதியில் மருந்து தயாரிக்கும் பணியில் டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் இறங்கியது.
முதல் கட்டமாக அனைத்து பெரு நகரங்களில் உள்ள அரசு மருத்துவ மனைகள் மற்றும் மருந்தகங்களில் மருந்து கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 10 சாஷே பாக்கெட் கொண்ட ஒரு டப்பாவின் விலை ரூ.990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு இது அதிகபட்ச தள்ளுபடி விலையில் வழங்கப் படும் என்றும் அந்நிறுவனம் தெரி வித்துள்ளது.
மருத்துவர் பரிந்துரையின்பேரிலும், மருத்துவரின் கண்காணிப்பின் கீழும் இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே டாக்டர் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்யப்பட மாட் டாது. கரோனா வைரஸ் பாதிக்கப்பட் டோருக்கு சிகிச்சை அளிக்கும் மருந்து களில் தற்போது 2-டிஜி பவுடரும் சேர்ந்துள்ளது.