

சேலம்: கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழை மற்றும் அங்குள்ள அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படும் நீரின் அளவை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 3,036 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 3,568 கனஅடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 87.81 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று காலை 86.90 அடியானது. நீர் இருப்பு 49.17 டிஎம்சி-யாக உள்ளது.