

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையிலும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத் துக்குள் வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்ற விதிமுறை தொடர்கிறது. இ - பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகிறது. இதுகுறித்து ஜுஜுவாடி இ-பாஸ் சோதனை மைய அலுவலர் கூறியதாவது:
நடப்பாண்டில் கரோனா இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்த ஜுஜுவாடி அருகே இ-பாஸ் சோதனைச்சாவடி அமைக் கப்பட்டு, தமிழகத் துக்குள் வரும் அனைத்து வெளிமாநில வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டது. அங்கு 24 மணி நேரமும் இ-பாஸ் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இ-பாஸ் இல்லாத வெளி மாநில வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின் றன.
மேலும் இ-பாஸ் இல்லாமல் வருபவர்களை இங்கிருந்தே இ-பாஸ் பெற விண்ணப்பிக்க வைத்து, இ-பாஸ் கிடைத்ததும் தமிழகத்துக்குள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. இச்சோதனைச் சாவடியில் மருந்து, உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படு கிறது.
மேலும் ஓசூர் மாநகராட்சி ஊழியர்கள் மூலமாக தமிழகத்துக்குள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிருமி நாசினி தெளிப்பு மற்றும் வாகனங்களில் வருபவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை உள்ளிட்ட பணிகளில் 24 மணி நேரமும் ஒரு ஷிப்ட்டுக்கு 5 பேர் வீதம் 3 ஷிப்ட்களில் மொத்தம் 15 மாநகராட்சி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கரோனா தடுப்பு இ-பாஸ் கண் காணிப்பு மையத்தில் 24 மணி நேர வாகனச்சோதனை உள்ளிட்ட பணிகளில் காவல்துறை, வருவாய்துறை, சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைதுறை, ஓசூர்மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பணி யாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.