தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூல் : இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து சிதம்பரத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத் தினர்.
சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவ லம் அருகே இந்திய மாணவர் சங்கம் சார்பில், அனைத்து தனி யார் பள்ளிகளிலும் கட்டாய கல்விஉரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களின் பட்டி யலை வெளியிட வேண்டும். அரசுநிர்ணயித்த கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாற்று சான்றிதழ் இன்றி அரசு பள்ளியில் சேர வரும், தனியார் பள்ளி மாணவர்கள், வெளியூரில் படித்த மாணவர்களை சான்றிதழின்றி சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் கோரிக்கைகள் குறித்து முழக்கங்கள் எழுப்பப் பட்டன. பின்னர் சிதம்பரம் சார்-ஆட்சியரின் நேர்முக உதவியா ளரை சந்தித்து மனு அளித்தனர்.
