

கடலூரில் ஒலிம்பிக் செல்ஃபி பாயிண்டை மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்தார்.
ஐப்பான் தலைநகர் உள்ள டோக்கியோ நகரில் ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட்8-ம் தேதி வரை ஒலிம்பிக் விளையாட் டுப்போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில், மேசைப்பந்து போட்டியில் ஜி.சத்யன் மற்றும் அ.சரத்கமல், வாள்சண்டையில் சி.ஏ.பவானிதேவி, பாய்மரப்படகோட்டுதலில் கே.சி.கணபதி, வருண், அ.தக்கர் மற்றும் நேத்ரா குமணன் ஆகிய தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்,வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
அவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும், பொதுமக்களுக்கு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தின் முன்பு ஒலிம்பிக் செல்ஃபி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐய்யப்பன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் நேற்று தொடக்கி வைத்தார். அவர் பேசியது:
"டோக்கியோவினை நோக்கி சாலை" எனும் அனைத்து வயதினருக்குமான ஆன்லைன் வினாடி வினா போட்டி நடை பெற்று வருகிறது. ஜூலை 22-ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் "https://fitindia.gov.in" என்னும் இணைய தளத்தின் மூலம் கலந்து கொள்ளலாம். இதில் 120 விநாடிகளுக்குள் ஒலிம்பிக் குறித்தான 10 கேள்விகள் கேட்கப்படும். ஒரு நபர் ஆன்லைன் மூலம் ஒரு முறை மட்டுமே பங்கேற்க இயலும். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அண்ணா விளையாட்டுஅரங்கில் 18 வயதுக்கு மேற்பட்டவர்க ளுக்கு இலவச கரோனா தடுப்பூசி முகாமினை தொடக்கி வைத்தார். கோட் டாட்சியர் அதியமான் கவியரசு, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.