

மதுரை மாவட்ட அளவில் ஏற்கெனவே மதுரை காவலன் பிரிவில் 20 சிறப்பு ரோந்து வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்நிலையில் இரு சக்கர ரோந்து வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் நடவடிக்கை எடுத்தார். அதன்படி 19 சிறப்பு ரோந்து வாகனங்கள் நேற்று செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. இதன் தொடக்க விழா மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். மதுரை சரக டிஐஜி காமினி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளர் விக்னேஷ் வரன், ஆய்வாளர் விஜயகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.