

ராஜபாளையத்தில் கண்மாயில் குளிக்கச் சென்றபோது பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
ராஜபாளையம் ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் நல்லையா. இவரது மனைவி ஆறுமுகத்தாய் (20). இவர்களுக்கு ஓராண்டுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இந்நிலையில், ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள செங்குளம் கண்மாயில் உறவினர்களுடன் ஆறுமுகத்தாய் குளிக்கச் சென்றார். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற நிலையில் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
தகவல் அறிந்த ராஜபாளையம் தெற்கு போலீஸார் அவரது உட லைக் கைப்பற்றி ராஜபாளையம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.