

திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(28). இவரை முன்விரோதம் காரணமாக காஜாப்பேட்டை விறகு மந்தை தெருவைச் சேர்ந்த கமலக்கண்ணன்(40), பாலக்கரை எடத்தெருவைச் சேர்ந்த தங்கமுத்து (41) ஆகியோர் நேற்று முன்தினம் கத்தியால் குத்தினர். படுகாயமடைந்த மணிகண்டன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.