

திருவாரூர்: பெட்ரோல், டீசல் விலை உயர்வையும், லாரிகளுக்கான காப்பீட்டு கட்டண உயர்வையும் திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்ட லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் நேற்று வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
இதையொட்டி, மன்னார்குடியில் நடைபெற்ற கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்துக்கு, மன்னை வட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அய்யப்பன், மன்னார்குடி வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.வி.ஆனந்த், லாரி சங்க செயலாளர் ராஜா, துணைத் தலைவர் ராஜாராமன், பொருளாளர் நீலகண்டன், துணைச் செயலாளர் மூர்த்தி மற்றும் லாரி உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.