வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பதவி உயர்வுடன் பணியிட மாறுதல் : ராணிப்பேட்டை டிஆர்ஓ ஜெயச்சந்திரன் உத்தரவு

வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பதவி உயர்வுடன் பணியிட மாறுதல் :  ராணிப்பேட்டை டிஆர்ஓ ஜெயச்சந்திரன் உத்தரவு
Updated on
1 min read

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பதவி உயர்வு மூலம் 13 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களை பணியிட மாறுதல் செய்து மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ராணிப் பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் வெளி யிட்டுள்ள உத்தரவில், ‘‘ராணிப் பேட்டை மாவட்டத்தில் 13 முதுநிலை வருவாய் ஆய்வாளர் பணியிடத்துக்கு பதவி உயர்வு மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கலவை சமூக பாதுகாப்பு திட்ட முதுநிலை வருவாய் ஆய்வாளராக ஆனந்தன், அரக் கோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராக சாந்தி, நெமிலி சமூக பாதுகாப்பு திட்ட முதுநிலை வருவாய் ஆய்வாளராக வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் அலுவலக கணக்குப் பிரிவில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக நடராஜன், சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், மாவட்ட ஆட்சியர் அலுவலக கணக்கு பிரிவில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக கோகுலகிருஷ்ணன், அரக் கோணம் வட்டாட்சியர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராக சுரேஷ், ஆற்காடு வட்டாட்சியர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராக விசாகரன், மாவட்ட ஆட்சியர் அலுவலக க்யூ பிரிவு முதுநிலை வருவாய் ஆய்வாளராக ரமேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் அலுவலக சி-பிரிவு முதுநிலை வருவாய் ஆய்வாளர்களாக பாலாஜி, ராஜகோபால், வாலாஜா வட்டாட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக ராமு, நெமிலி வட்டாட்சியர் அலு வலக முதுநிலை வருவாய் ஆய்வாளராக சவுந்தர்ராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில், ரமேஷ்குமார், பாலாஜி, ராஜகோபால், சவுந்தர்ராஜன், ராமு ஆகியோர் கிராம நிர்வாக அலுவலராக இருந்து முதுநிலை வருவாய் ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். மற்றவர்கள் இளநிலை வருவாய் ஆய்வாளர்களாக இருந்து முதுநிலை வருவாய் ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றுள் ளனர்’’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in