

இந்நிலையில் ஜூன் 28-ல் (இன்று) பகவத்கீதை அமுதம் பயிற்சியின் அடுத்த வகுப்பு தொடங்குகிறது. தினமும் இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஜூலை 15-ம் தேதி வரை 18 நாட்கள் வகுப்பு நடத்தப்படுகிறது. இதில் 14 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பங்கேற்கலாம். இதற்கு கட்டணம் இல்லை ஆனால் முன்பதிவு அவசியம். https://iskconmadurai.com/ என்ற இணையதளம் அல்லது 7010641131 என்ற எண்ணில் முன்பதிவு செய்யலாம். பயற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை தென்தமிழக இஸ்கான் மண்டலச் செயலாளர் சங்கதாரி பிரபு தலைமையில் மதுரை, திருநெல்வேலி, பெரியகுளம் கிளைகளின் இஸ்கான் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.