

பெரம்பலூர் மாவட்டம் செட்டிக் குளம் அருகேயுள்ள நாட்டார் மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி(48).
ஒரு துக்க நிகழ்வில் பங்கேற் பதற்காக செட்டிக்குளத்துக்கு வந்திருந்த தனது சகோதரியான சமயபுரம் மருதூர் பிரிவு சாலை பகுதியைச் சேர்ந்த துரை ராஜ் மனைவி சரோஜா(35), அவரது மகன்கள் விஷ்ணு(15), தனபால்(9) ஆகியோரை இருசக் கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு, சமயபுரத்துக்கு ராம சாமி நேற்று புறப்பட்டுச் சென்றார்.
சென்னை புறவழிச் சாலையில் சமயபுரம் பகுதியில் வந்தபோது, பின்னால் சென்னையிலிருந்து புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மோதியது. இதில், இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் சிறுவன் தனபால் அந்த இடத்திலேயே இறந்தார்.
படுகாயமடைந்த 3 பேரையும் சமயபுரம் போலீஸார் மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரோஜா உயிரிழந்தார்.
இதுகுறித்து சமயபுரம் போலீ ஸார் வழக்கு பதிவு செய்து, லாரி டிரைவரான திருவாரூர் மாவட்டம் வெங்காரம் பேரையூரைச் சேர்ந்த சிவக்குமாரை(39) கைது செய்து, விசாரணை நடத்தி வரு கின்றனர்.