

தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், முன்னாள் மாணவர் இயக்கத் தினர் இணைந்து தமிழக முதல் வரின் கரோனா நிவாரண நிதிக்கு ரூ.1.42 லட்சம் வசூல் செய்தனர். இந்த நிதியை தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழியிடம் முன்னாள் மாணவர் இயக்க இயக்குநர் அருட்தந்தை ஆரோக்கியசாமி சந்தியாகு, தலைமை ஆசிரியர் அருட்சகோதரர் ஆரோக்கியதாஸ் வழங்கினர்.