திருவண்ணாமலையில் விதிகளை மீறி செயல்பட்ட - துணிக்கடைகள், தேநீர் கடைகளுக்கு ரூ.2,500 அபராதம் : கோட்டாட்சியர் வெற்றிவேல் நடவடிக்கை

திருவண்ணாமலையில் முகக்கவசம் அணியாமல் சுற்றி வந்த இளைஞர்களை எச்சரித்து முகக்கவசம் வழங்கிய கோட்டாட்சியர் வெற்றிவேல்.
திருவண்ணாமலையில் முகக்கவசம் அணியாமல் சுற்றி வந்த இளைஞர்களை எச்சரித்து முகக்கவசம் வழங்கிய கோட்டாட்சியர் வெற்றிவேல்.
Updated on
1 min read

திருவண்ணாமலையில் விதிகளை மீறி செயல்பட்ட துணிக் கடைகள், தேநீர் கடைகள் உள்ளிட்ட கடை களுக்கு மொத்தம் ரூ.2,500 அபராதம் விதித்து கோட்டாட்சியர் வெற்றிவேல் எச்சரித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட் டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும், தளர்வுகள் அளிக்கப்படாத கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறந்து வணிகம் செய்வது, தொற்று பரவலை தடுக்கும் என மத்திய, மாநில அரசு களின் வழிகாட்டி நெறிமுறைகள் வலியுறுத்துகின்றன. இவற்றை கடைபிடிக்காமல் வாடிக்கை யாளர்களை அனுமதிப்பது மற்றும் பொது இடங்களில் மக்கள் சுற்றி வருவது போன்ற செயல்கள் தொடர்ந்து வருகிறது.

இது குறித்து சுகாதாரத் துறையினருக்கு புகார்கள் வந்ததால், திருவண்ணாமலையில் கோட்டாட்சியர் வெற்றிவேல் தலைமையிலான குழுவினர் நேற்று அதிரடி ஆய்வு நடத்தினர். அப்போது, அரசின் அனுமதி இல்லாமல் திறந்திருந்த துணிக் கடைகளை மூட உத்தரவிட்டார். மேலும், அந்த கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வாடிக்கையாளர்கள் இருந்ததால், அவர்களையும் கடைகளின் உரிமையாளர் ஆகியோரை எச்சரித்தார்.

அதேபோல், தேநீர் கடைகளில் முகக்கவசம் அணியாமல் பொது மக்கள் கூடி இருந்தனர். மேலும் பொது இடங்களிலும் முகக்கவசம் அணியாமல் இளைஞர்கள் சுற்றி வந்தனர். அவர்களை அழைத்து எச்சரித்து, முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். மேலும் அவர்களுக்கு முகக்கவசங்களை வழங்கினார். இந்த ஆய்வில் விதிகளை மீறி செயல்பட்ட 5 துணிக்கடைகள் மற்றும் தேநீர் கடைகளில், முகக்கவசம் அணியாத வர்களுக்கு ரூ.2,500 அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது, வட்டாட்சியர் வெங்கடேசன் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in