பெற்றோரை இழந்த குழந்தைகள் அரசின் உதவிகளை பெற அழைப்பு :

பெற்றோரை இழந்த குழந்தைகள் அரசின் உதவிகளை பெற அழைப்பு :
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ப. வெங்கட பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

கரோனா வைரஸ் தொற்று காரணமாகவும், வேறு காரணங்களாலும் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு தமிழக முதல்வரால் பல்வேறு நலத்திட்ட உதவிகள் அறிவிக் கப்பட்டுள்ளன.

எனவே, இந்த வகையில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் பாது காவலர்கள், ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, 164, எம்.எம். பிளாஸா, 2-வது தளம், திருச்சி மெயின் ரோடு, பெரம்பலூர் என்ற முகவரிக்கு நேரில் சென்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04328-275020 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in