தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ் மூலம் கேபிள் இணைப்பு - ஆபரேட்டர்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம் :

தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ் மூலம் கேபிள் இணைப்பு  -  ஆபரேட்டர்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம்  :
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

“தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் பொதுமக்களுக்கு கட்டணம் ஏதுமின்றி இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை வழங்கி 200-க்கும் மேற்பட்ட சேனல்களை மற்ற நிறுவனங்களை விட குறைந்த மாத சந்தா தொகையான ரூ.140 மற்றும் ஜி.எஸ்.டி. விகிதத்தில், பதிவுசெய்யப்பட்ட உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கி வருகிறது.

இந்த செட்டாப் பாக்ஸ்களில் TACTV என்று பெயர் அச்சிடப்பட்டிருக்கும். பிற தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ்களை அரசு செட்டாப் பாக்ஸ் எனக்கூறி ஆபரேட்டர்கள் பொதுமக்களை ஏமாற்றிவருவதாக தெரிகிறது. எனவே,பொதுமக்கள் TACTV என அச்சிடப்பட்டிருக்கும் அரசு செட்டாப் பாக்ஸ்களை ஆபரேட்டர்களிடம் கேட்டுப்பெற வேண்டும். உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சந்தாதாரர்களின் விருப்பத்துக்கு மாறாகதனியார் செட்டாப் பாக்ஸ்கள் மூலம்இணைப்பு வழங்கினால் உடனடியாக 0461-2340021, 18004252911 என்ற எண்ணில் புகார் தெரிவிக்க வேண்டும். அரசு செட்டாப் பாக்ஸ்கள் பழுதடைந்தாலோ, மாதாந்திர கட்டணம் செலுத்தாமல் துண்டிப்பு செய்யப்பட்டிருந்தாலோ, வேறு பகுதிக்கு சந்தாதாரர் குடிபெயர்ந்து சென்றாலோ அல்லது தனியார் செட்டாப் பாக்ஸ்களை பயன்படுத்தினாலோ உடனடியாக அவர்கள் தங்கள் வசம் இருக்கும் அரசு செட்டாப் பாக்ஸ்கள், ஏவி கார்டு, ரிமோட் மற்றும் பவர்அடாப்டர் ஆகியவற்றை அப்பகுதியிலுள்ள அரசு கேபிள் டிவி ஆபரேட்டரிடம் ஒப்படைக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in