

முறப்பநாடு அருகே ஈச்சாந்த ஓடை கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் மனைவி சண்முக லட்சுமி(30). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கமலேஷ்(3) என்ற மகன் உள்ளார். லாரி ஓட்டுநரான விக்னேஷ் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவதால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில், விக்னேஷ் குடிப்பழக்கத்தை நிறுத்தாததால் விரக்தியடைந்த சண்முகலட்சுமி, தனது குழந்தையை கொன்று விட்டு, அவரும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
சண்முகலட்சுமி குடும்ப பிரச்சினை காரணமாக மகனை கொன்று விட்டு தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து முறப்பநாடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.