

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள இஞ்சிக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் இந்திரா(55). இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டுத்தோட்டத்தில் குளித்துவிட்டு, வீட்டிலிருந்து தோட்டத்துக்குச் செல்லும் மின் வயரின் மேல் ஈரத்துணியை காயப்போட்டுள்ளார். அப்போது வயரிலிருந்து மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே இந்திரா உயிரிழந்தார்.
இதுகுறித்து திருவையாறு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.