

தி.மலை மாவட்டம் ஆரணியில் உள்ள ராணுவ கேன்டீனில் பொருட்களை வாங்க வாடிக்கையாளர்கள் நேற்று குவிந்தனர்.
கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடை வெளியை கடைபிடிப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகிறது. சுகாதாரத் துறையின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத கடைகள், வங்கிகள் உள்ளிட்டவைக்கு அபராதம் விதிக்கப்பட்டு ‘சீல்' வைக்கப்படுகிறது.
இந்நிலையில், தி.மலை மாவட்டம் ஆரணி நகரம் ஆற்காடு சாலையில் உள்ள ராணுவ கேன்டீனில் பொருட்களை வாங்க முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் நேற்று திரண்டனர். அப்போது, சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், ஒருவர் மீது ஒருவர் இடித்துக் கொண்டு, கேன்டீன் உள்ளே நுழைந்து பொருட்களை வாங்கிச் சென்றனர்.
டெல்டா பிளஸ் என்ற புதிய வகை கரோனா தொற்று பரவி வரும் நிலையில், சமூக இடை வெளியை கடைபிடிக்காமல் இருப்பது ஆபத்தை ஏற்படுத்தும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கூட்டத்தை கட்டுப்படுத்த நியாய விலை கடைகளில் டோக்கன் வழங்கு வதை போல், ராணுவ கேன்டீன்களில் முன் பதிவு செய்தவர்களுக்கு வாட்ஸ் -அப் அல்லதுகுறுஞ்செய்தி மூலமாக குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கி வாடிக்கை யாளர்களை வரவழைக்க ராணுவ கேன்டீன் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.