

மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் கடற்கரையோரம் அரிய வகை நீலத்திமிங் கிலத்தின் உடல் நேற்று அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது. இதையடுத்து மீனவ பஞ்சாயத்தார் மரக்காணம் போலீஸார் மற்றும் மீன்வளத் துறையினர், கால்நடைத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சுமார் 50 அடி நீலமும், 20 டன் எடையும் கொண்ட இத்திமிங்கலம் கப்பலில் அடிபட்டு இறந்து இருக்கலாம். காற்றின் திசை மாற்றத்தால் உடல் மரக்காணம் அருகே கரை ஒதுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மீன்வளத் துறையினர் நேற்று மாலை வரை வராததால் கரை ஒதுங்கிய திமிங்கிலத்தின் அழுகிய உடல் கேட்பாரற்று கிடந்தது.