கோனேரிபாளையத்தில்சேமிப்பு பணம் கையாடல்; அஞ்சலக அலுவலர் சஸ்பெண்ட் :

கோனேரிபாளையத்தில்சேமிப்பு பணம் கையாடல்; அஞ்சலக அலுவலர் சஸ்பெண்ட் :
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டம் கோனேரிபாளையத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை(23). இவர் அதே ஊரில் உள்ள கிளை அஞ்சலகத்தில் அஞ்சலக அலுவலராக பணிபுரிந்து வந்தார்.

இந்த அஞ்சலகத்தில் அப்பகுதி மக்கள் சேமிப்பு கணக்கு, பொன்மகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் லட்சக்கணக்கில் பணம் செலுத்தியுள்ளனர். ஆனால், அதை வரவு வைக்காமல் சின்னதுரை காலம் தாழ்த்தியுள்ளார்.

இதுகுறித்த புகாரின்பேரில், ரங்கம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் விஜயா அங்கு சென்று ஆய்வு செய்தார்.

அப்போது, சின்னதுரை லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து அஞ்சலக கண்காணிப்பாளர் விஜயா நேற்று உத்தரவிட்டார். தொடர்ந்து, அவர் மீது போலீஸில் புகார் செய்யப்பட உள்ளதாகவும், பொதுமக்கள் பணம் திரும்ப வழங்கப்படும் எனவும் அஞ்சல் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in